பள்ளி மாணவர்களின் செயல்பாடு குழு அமைத்து கண்காணிப்பு
பள்ளி மாணவர்களின் செயல்பாடு குழு அமைத்து கண்காணிப்பு
UPDATED : அக் 07, 2023 12:00 AM
ADDED : அக் 07, 2023 05:18 PM
உடுமலை:
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள, ஒவ்வொரு பள்ளி அளவில் குழு அமைத்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களின் ஒழுங்கு கட்டுப்பாட்டை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தலைமையாசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும்உடற்கல்வி ஆசிரியர் இணைந்த குழு அமைக்கவும், சீருடையில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை இக்குழுவினர், உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்கூறியதாவது:பள்ளிக்கல்வித்துறை இயக்குனரக சுற்றறிக்கையை பின்பற்றி, மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதில், பாடவேளையில் வகுப்புகளை புறக்கணித்து, மாணவர்கள் வெளியே செல்கின்றனரா, பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளியின் பிற பகுதியில் நடமாடுகிறார்களா என்பதை கண்காணித்து, அவர்களைவகுப்புகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நேரங்களில், மர்மநபர்கள், பள்ளிக்கு அவப்பெயர் மற்றும் குந்தகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதாக, கல்வித்துறைக்கு புகார்கள் வருகிறது.அத்தகைய சூழலில் தலைமையாசிரியர்கள், பிற ஆசிரியர்கள் உடனடியாக குழுவினருடன் கலந்து ஆலோசித்து, சுமூகமாக கையாண்டு தீர்வு காண வேண்டும். மாணவர்களின் ஒழுக்கமே முக்கியம்; அதுவே குழுவின் நோக்கம் என்பதை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
