UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 08, 2023 08:46 AM
பாகூர்:
புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலையின் கீழ் இயங்கும், கஸ்துாரிபா காந்தி செவிலியர் கல்லுாரியின் 20ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.விழாவில், கல்லுாரி முதல்வர் புனிதா ஜோஸ்பின் வரவேற்றார். பல்கலை துணை வேந்தர் நிஹர் ரஞ்சன் பிஸ்வாஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் பேரவையின் பதிவாளர் அனி கிரேஸ் கலைமதி சிறப்புரையாற்றினார்.பேராசிரியர் கிருபா ஏஞ்சலின் கல்லுாரியின் 20 வருட முக்கியத்துவம் குறித்து பேசினார். கடந்த 20 ஆண்டுகளில் நடந்த கல்லூரியின் சிறப்புகள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. மகாத்மா காந்தி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் நிர்மல்குமார், கல்லூரி முதல்வர் சீதேஸ்கோஷ், பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலை பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தற்போது பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள், கல்வியில் முதன்மை இடம் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு விருது மற்றும் பாராட்டு மடல் வழங்கப்பட்டது. செவிலியர் கல்லூரி துணை முதல்வர் சுமதி நன்றி கூறினார்.
