UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 08, 2023 05:13 PM
நாமக்கல்:
நாமக்கல் கம்பன் கழகம் சார்பில், கம்பர் விருது வழங்கும் விழா, வரும் 13ல் நாமக்கல் நளா ஓட்டலில் நடக்கிறது. கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். செயலாளர் கலைமாமணி விருது பெற்ற அரசு பரமேஸ்வரன் வரவேற்கிறார். நிர்வாகிகள் நல்லுசாமி, கோபால், சரவணன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தெலுங்கனா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மதுரை பேராசிரியர் சுந்தரத்துக்கு, கம்பர் விருதும், பெங்களூரு ராமசாமிக்கு, கம்பர் மாமணி விருதும் வழங்கப்படுகிறது. என்.பி.எஸ்., சுந்தர்ராஜன், டாக்டர் ராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சார்பில், கல்லாதது கம்பன் அளவு என்ற தலைப்பில், சொற்பொழிவு நடக்கிறது.தொடர்ந்து, ராசிபுரம் பரமேஸ்வரனுக்கு, நற்றமிழ் நாயகர் விருது, கந்தசாமிக்கு சமூக ஆர்வலர் விருது, இயற்கை விவசாயி கண்ணகிக்கு, வேளாண் வித்தகர் விருது, கிருஷ்ணமூர்த்திக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது.வரும், 14 மாலை 5 மணிக்கு, நடுவர் ராஜா தலைமையில், இலங்கை வேந்தன் ராவணனின் வீழ்ச்சிக்கு காரணம், முடிவில்லா ஆவணமா, முறையற்ற காமமா என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடக்கிறது.அதில், ராஜபாளையம் ராஜ்குமார், திருச்சி மாது, மதுரை ரேவதி சுப்புலட்சுமி, சென்னை பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசுகின்றனர். ஏற்பாடுகளை, கம்பன் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள்செய்துள்ளனர்.
