UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 08, 2023 05:20 PM
ஓசூர்:
ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் மற்றும் மினி அறிவியல் மையம் திறக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் அடுத்த ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,750 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு தேவையான வசதியை செய்து தர, வேப்டெக் கார்ப்பரேஷன் நிறுவனம் முன்வந்தது. அதன்படி அந்நிறுவனம் சார்பில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் மற்றும் மினி அறிவியல் மையம் அமைக்கப்பட்டு, இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை நர்மதா தேவி தலைமை வகித்தார். மாநகராட்சி கல்வி குழு தலைவர் ஸ்ரீதரன், நகரமைப்பு குழு தலைவர் அசோகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேப் டெக் கார்ப்பரேஷன் நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட துணை தலைவர் சுஜாதா நாராயணன் திறந்து வைத்தார். ஏற்கனவே, வேப்டெக் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த மாதம், 40 லட்சம் ரூபாய் மதிப்பில், பள்ளிக்கு தேவையான பென்ஞ், டெஸ்க் வழங்கியது குறிப்பிடத்தக்கது.வேக்டெக் டிரான் சிஸ்ட் இந்தியா நிறுவன மனிதவள பிரிவு இயக்குனர் ப்ரீத்தி, இந்தியா ஸ்டெம்ப் பவுண்டேசன் இயக்குனர் சுதாம் சு ஷர்மா, பள்ளி பி.டி.ஏ., தலைவர் ராஜசேகர், துணை தலைவர் ஆனந்தரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
