தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப். 4ல் துவக்கம்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப். 4ல் துவக்கம்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப். 4ல் துவக்கம்


UPDATED : ஜன 23, 2010 12:00 AM

ADDED : ஜன 23, 2010 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2010 12:00 AM ADDED : ஜன 23, 2010 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி பொதுத் தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வருவதால், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 1ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை நடைபெறுகின்றன. பத்தாம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 23ல் துவங்கி, ஏப்ரல் 9ம் தேதி வரை நடக்கின்றன.


பிளஸ் 2 தேர்வை, மூன்று லட்சத்து 22 ஆயிரத்து 484 மாணவர்கள், மூன்று லட்சத்து 67 ஆயிரத்து 453 மாணவியர் என மொத்தம், ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 937 பேர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்புத் தேர்வை 11 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். முதல் கட்டமாக, செய்முறைத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.


முதலில், பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளும், அடுத்து மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளும் நடைபெற உள்ளன. பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை, மாநிலம் முழுவதும் பிப்ரவரி 4ம் தேதி துவக்கி, 24ம் தேதிக்குள் முடிப்பதற்கு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த தேதிகளுக்குள், செய்முறைத் தேர்வை நடத்தி முடிப்பது, முதன்மைக் கல்வி அலுவலர்களின் பொறுப்பு. இந்த தேர்வில், மூன்றரை லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.


மாணவர்களுக்கான பதிவெண்கள் அடங்கிய பட்டியல், ஜன. 29ம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அதன்பின், ஓரிரு நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். செய்முறைத் தேர்வுக்காக, பள்ளி ஆய்வகங்களில் அனைத்து கருவிகளையும் சரிபார்த்து தயார் நிலையில் வைக்க, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


ஐந்தாயிரம் தேர்வு மையங்கள்: இதற்கிடையே, தேர்வுக்காக புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த மனுக்களை ஆய்வு செய்து, 100க்கும் மேற்பட்ட பள்ளிகளை புதிய தேர்வு மையங்களாக அனுமதித்து, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்வை பொறுத்தவரை, பிளஸ் 2 தேர்வுகள் 1,738 மையங்களில் நடந்தன. இது, வரும் தேர்வில் 1,800 ஆக உயருகிறது. அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2,788 மையங்களில் கடந்த ஆண்டு நடந்தன. இது, 2,850 ஆக உயர்ந்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us