தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேச முடியாதவர்கள் எழுதி காட்டுவதற்கு செயலி

பேச முடியாதவர்கள் எழுதி காட்டுவதற்கு செயலி

பேச முடியாதவர்கள் எழுதி காட்டுவதற்கு செயலி


UPDATED : அக் 09, 2023 12:00 AM

ADDED : அக் 09, 2023 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2023 12:00 AM ADDED : அக் 09, 2023 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷிவமொகா:
ஷிவமொகா டவுன் பகுதியைச் சேர்ந்தவர்கள் அக் ஷய் நாயக், கார்த்திக். நண்பர்களான இருவரும் இணைந்து, பேச முடியாதவர்கள் எழுதிக் காட்டுவதற்காக, விரைட்டல் என்ற செயலி உருவாக்கி உள்ளனர்.இந்த செயலி குறித்து, அவர்கள் கூறியதாவது:
பேச முடியாதவர்கள், கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது, தங்களுக்கு என்ன வேண்டும் என்று, பேப்பர்களில் எழுதிக் காட்டுவர். பஸ்களில் பயணம் செய்யும்போது, டிக்கெட் எடுப்பதில் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.தங்கள் செல்ல வேண்டிய இடத்தை கைகளில் எழுதி, நடத்துனர்களிடம் காட்டி, டிக்கெட் வாங்குவதை, நாங்கள் பார்த்துள்ளோம். அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், ஒரு செயலியை உருவாக்க முடிவு செய்தோம். அப்படி உருவானது தான், விரைட்டல் செயலி. இந்த செயலியை &'பிளே ஸ்டோரில்&' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செயலியைப் பயன்படுத்தி பேச முடியாதவர்கள், என்ன சொல்ல விரும்புகின்றனரோ அதை எழுதிக் காட்டலாம்.பேனா, பேப்பரைத் தேட வேண்டியதில்லை. இந்த செயலியில் கன்னடா, ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி, குஜராத்தி, உருது, மராத்தி ஆகிய 9 மொழிகளில் எழுதிக் காட்டலாம். மேலும் சில மொழிகளையும் இணைக்க உள்ளோம். பேச முடியாதவர்களிடம் இருந்து, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த செயலி குறித்து மைசூரில் உள்ள காது கேளாதோர், பேச முடியாதோர் பள்ளியிலும் விளக்கம் அளிக்க இருக்கிறோம். பேச முடியாதவர்களின் சிரமத்தைப் போக்க, இந்த செயலியை உதவியதாக இருக்கும் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அக் ஷய் நாயக்கும், கார்த்திக்கும் பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக வேலை செய்தவர்கள். அந்த வேலையை உதறிவிட்டு, ஷிவமொகாவில் சிறிய அளவில், சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us