UPDATED : அக் 09, 2023 12:00 AM
ADDED : அக் 09, 2023 04:55 PM
அ நிறம் | அளவு
சென்னை:
இலக்கியம் காட்டும் ஆன்மீகம் நூல் வெளியீட்டு விழா நடந்தது.அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரை தொகுப்பை காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா வெளியிட்டார். லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் பெற்றுக் கொண்டார். இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் இதய கீதம் ராமனுஜம், தேசிய தலைவர் பெரியண்ணன், தலைவர் குருநாதன், நூலின் தொகுப்பாசிரியர் ஈஸ்வரி, கவிஞர் பூங்கோதை, கவிஞர் பாண்டியன் லண்டன் ஐக்கிய ராஜ்யசபா பல்கலையின் தமிழ்துறை உறுப்பினர் கவிஞர் சுரேஷ் குமார் ஆகியோர் நூலினை பெற்றுக் கொண்டனர்.
