தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுப்பட்டு பள்ளியில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு

புதுப்பட்டு பள்ளியில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு

புதுப்பட்டு பள்ளியில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு


UPDATED : அக் 09, 2023 12:00 AM

ADDED : அக் 09, 2023 04:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2023 12:00 AM ADDED : அக் 09, 2023 04:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.இ.ஓ., கிருஷ்ண பிரியா நேற்று திடீர் ஆய்வு செய்தார்.பள்ளியில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை குழுவாக சி.இ.ஓ., ஒருங்கிணைந்தார். பின், மாணவர்களுக்கு படிப்பின் அவசியம், அதனால் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும், சமுதாயத்திற்கும் ஏற்படும் நன்மைகள் பற்றியும், மாணவர்கள் இடை நிற்றல் இன்றி பள்ளிக்கு வருவதால் ஏற்படும் பயன்கள் பற்றியும் எடுத்து கூறினார்.சக நண்பர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு வராமல் இருந்தால் அவர்களை பள்ளிக்கு வர வைக்க முயற்சிக்க வேண்டும். அது உங்களைப் போன்ற சக மாணவரால் மட்டுமே சாத்தியம் என்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். டி.இ.ஓ., ஆரோக்கியசாமி, தலைமை ஆசிரியர் அன்னக்கிளி, ஆசிரியர் பயிற்றுனர் குப்புசாமி உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us