30 வயது இளைஞர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு அதிகரிப்பு
30 வயது இளைஞர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு அதிகரிப்பு
UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 08:26 AM
பெங்களூரு:
பெங்களூரு ரூரல் மாவட்டத்தில், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறிப்பாக இளைஞர்களிடம், இத்தகைய பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.பெங்களூரு நகரை ஒட்டியுள்ள, பெங்களூரு ரூரல் பகுதி அதிவேகமாக வளர்கிறது. வாழ்க்கை தரம் நவீனமாகவும், உணவு பழக்கமும் மாறியுள்ளது.இது இளைஞர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக வயதானவர்களிடம் காணப்பட்ட நீரிழிவு, ரத்த அழுத்தம் இளைஞர்களிடம் காணப்படுவது, கவலைக்குரிய விஷயமாகும்.இது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இதற்கு முன், 50 வயதை கடந்தவர்களுக்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்பு ஏற்படுவது வழக்கம். ஆனால் சுகாதாரத்துறை ஆய்வின்படி, 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும் நோய்கள் தாக்குகின்றன.அதி நவீன வாழ்க்கை முறை, உணவு பழக்கம், புகை பிடிப்பது, பணி நெருக்கடி உட்பட, பல்வேறு காரணங்களால் அவர்கள் பாதிப்படைகின்றனர்.தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு, உடற் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே, நோய்களில் இருந்து விடுபட முடியும். இது குறித்து, சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.பெங்களூரு ரூரல் மாவட்டத்தில், நோய்களை கண்டுபிடிக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ரத்த அழுத்தம், நீரிழிவு, மூன்று விதமான புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும்.ஆஷா ஊழியர்கள் உதவியில், மொபைல் செயலியில் பதிவு செய்ய வைத்து, ஆரம்ப சுகாதார மையங்களில், மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்படும்.நோய்கள் உள்ளவர்களுக்கு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். ஆரம்ப சுகாதார மையங்களில் ரத்த பரிசோதனை, நீரிழிவு, உடல் எடை பரிசோதனை இயந்திரங்கள் வசதி செய்யப்பட்டுள்ளது.கூடுதல் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்பட்டால், தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
