UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 08:45 AM
மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் பிழைக்கும் மாணவர்களுக்கு, புரிதலை மேம்படுத்தி, வேண்டிய ஆதரவை பள்ளிகள் வழங்க வேண்டும். மற்ற மாணவர்களோடு ஒப்பிடுவது கூடாது.
காலி வகுப்பறைகள் இருந்தால், தலைமை ஆசிரியர்கள் பூட்டி வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் இருள் சூழ்ந்த பகுதிகள் இல்லாமல், போதிய வெளிச்சம் கிடைக்க செய்திருக்க வேண்டும்.
நெருக்கடி சூழல்களை கையாள அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்ட ஒரு குழு, முதல்வர், தலைமை ஆசிரியர் தலைமையில் ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாணவருக்கும் மன நலம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இக்குழு ஒருங்கிணைக்க வேண்டும். இவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தமிழக பள்ளிகளில், தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு அவ்வப்போது ஏற்படுத்தப்படுகிறது. மத்திய கல்வித்துறை வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படும் என்றனர்.
