UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 09:18 AM
கள்ளக்குறிச்சி:
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நாக் என்று அழைக்கப்படும் தேசிய தர மதிப்பீடு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தேசிய தரமதிப்பீட்டு நிறுவனத்தின் ஆய்வுக்காக விண்ணப்பித்தது. அதனடிப்படையில் நாக் தேசிய தரமதிப்பீடு நிறுவனம் கடந்த 5 மற்றும் 6 தேதிகளில் கல்லுாரியில் ஆய்வு மேற்கொண்டது.நாக் குழு உறுப்பினர்களும், தகவல் மற்றும் இணையதள நுாலக மைய இயக்குனருமான சிங்ஷூரல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நுட்பவியல் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் வினோத்குமார் கார்க், கர்நாடகா மாநிலம் கே.எல்.இ.எஸ்., லிங்கராஜ் கல்லுாரியின் முதல்வர் ராயகவுடாபாட்டில் ஆகியோர், கல்லுாரி வகுப்பறைகள், பாடம் நடத்தும் விதம், சுற்றுப்புற சூழல், மாணவர்களின் கல்வித்திறன் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், துணை முதல்வர் ஜான்விக்டர், துறைத்தலைவர்கள், உதவிபேராசிரியர்கள் உடனிருந்தனர்.
