தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : அக் 10, 2023 12:00 AM

ADDED : அக் 10, 2023 09:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2023 12:00 AM ADDED : அக் 10, 2023 09:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் கடந்த 1ம் தேதி துவங்கும் காலாண்டிற்கு, படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது வெற்றி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்றவர்கள் பதிவு செய்து புதுப்பித்து வரும் டிச.,31 ம் தேதி அன்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் வரும் டிச., 31ம் தேதி நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாதந்தோறும்பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு 200ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு 400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 600, மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு 750 மற்றும் பட்டபடிப்பு தேர்ச்சிக்கு 1,000ரூபாய்வீதம் வழங்கப்படுகிறது.விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் https://employ mentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து அசல் சான்றுகள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை, தேசியமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் வரும் நவ., 30ம் தேதி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us