UPDATED : அக் 11, 2023 12:00 AM
ADDED : அக் 11, 2023 09:34 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நடப்பாண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற அக்.,-6ம் தேதி, மாலை 5:00 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என, அத்துறை அறிவித்தது.அதன்படி, 194 பேர், கூட்டுறவு முழு நேர மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு கூடுதல் பதிவாளர்முருகன் தலைமைவகித்தார்.காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கூட்டுறவு மேலாண்மை படிப்பால் கிடைக்கும் வேலை வாய்ப்பு குறித்து, விளக்கி பேசினார். காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு பயிற்சி மேலாண்மை முதல்வர் உமாபதி வரவேற்றார்.
