UPDATED : அக் 11, 2023 12:00 AM
ADDED : அக் 11, 2023 09:38 AM
அ நிறம் | அளவு
சென்னை:
உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் மாணவர்களை தேர்வு செய்து, சுற்றுலாத்தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து அறிய, ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதற்காக, சென்னை மாவட்டத்தில், அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பயிலும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், நேற்று சென்னையில் இருந்து மாமல்லபுரம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
