UPDATED : அக் 11, 2023 12:00 AM
ADDED : அக் 11, 2023 09:37 AM
அ நிறம் | அளவு
சென்னை:
பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு, பைன் ஆர்ட்ஸ் கிளப் சார்பில், ஒரு வாரம் நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயிற்சி நேற்று துவங்கியது. திரைப்பட இயக்குனர் அனீஸ், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக திரைப்பட பயிற்சி பேராசிரியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், நடிப்பு, இயக்கம், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாணவ - மாணவியரின் தனித்திறமையை இப்பயிற்சி வழியாக வெளி கொண்டு வர முடியும் என, கல்லுாரி முதல்வர் சக்தி கூறினார்.
