தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்வியின் தரம் உயர்த்தவே புதிய விதிகள்!

மருத்துவ கல்வியின் தரம் உயர்த்தவே புதிய விதிகள்!

மருத்துவ கல்வியின் தரம் உயர்த்தவே புதிய விதிகள்!


UPDATED : அக் 11, 2023 12:00 AM

ADDED : அக் 11, 2023 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2023 12:00 AM ADDED : அக் 11, 2023 08:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதிதாக மருத்துவக் கல்லுாரிகள் துவங்குவதற்கும், மருத்துவ படிப்புக்கான இடங்களை அதிகரிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய விதிகளை, தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.அதன்படி, மக்கள் தொகையில், 10 லட்சம் பேருக்கு, 100 மருத்துவ படிப்பு இடங்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படும். இதற்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மருத்துவக் கல்லுாரிகளும், மாணவர் சேர்க்கை இடங்களும் அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூட, சமீபத்தில் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது.அதைக்கருதி, 10 லட்சம் மக்கள் தொகை உடைய பகுதிகளில், 100 மருத்துவ படிப்பு இடங்கள் என்ற வரம்பை வரையறுத்து, சமீபத்தில் புதிய விதிகள் வகுக்கப்பட்டன. அதன் அடிப்டையில் பார்த்தால், மேலும், 40,000 மருத்துவ படிப்புக்கான இடங்களை, நாடு முழுதும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த முடிவுக்கு, மருத்துவ துறையினர், தனியார் மருத்துவ சங்கத்தினர், மாணவர்கள், டாக்டர்கள் என, பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டும், வரவேற்பும் வந்துள்ளன. தரமான மருத்துவ கல்வியை உறுதி செய்வதற்காக, ஆணையத்தின் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us