புதிய கல்வி கொள்கை மாணவர்கள் மன அழுத்தத்தை போக்கும்
புதிய கல்வி கொள்கை மாணவர்கள் மன அழுத்தத்தை போக்கும்
UPDATED : அக் 11, 2023 12:00 AM
ADDED : அக் 11, 2023 09:33 PM
உலக மனநல தினத்தை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் அரங்கில், எண்ணித் துணிக என்ற தலைப்பில், மனநல மருத்துவ துறையினரும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், மூத்த மனநல மருத்துவ பேராசிரியர் லட்சுமி எழுதியுள்ள, சொல்லப்படாத இந்திய மனோதத்துவத்தின் ரகசியம்&' என்ற நுாலை, கவர்னர் ரவி வெளியிட்டார்.சிரமப்படுவர்
பின்னர் அவர் பேசியதாவது:
நம் நாட்டில், ஆட்டிசம் பாதிப்பால், 50 லட்சம் பேராவது சிரமப் படுவர். அவர்களை பராமரிக்கும் குடும்பத்தினரை பாராட்ட வேண்டும். மனநல மருத்துவ துறை, ஐரோப்பிய அறிவியலால் தற்போது பிரபலமாகி வருகிறது. அது, மனித உடல்களை கருவியாகவும், மன நலத்தை ஒரு பொருளாகவும் அணுகுகிறது. மாத்திரை, மருந்துகளால் ஏற்படும் வேதி மாற்றங்களை தீர்வாக கூறுகிறது.ஆனால், இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஆன்மிகம் சார்ந்த ஞானத்தோடு, ஐம்புலன்களால் அறிந்து உணரும் புத்தியில் இருந்தே, தெளிவான அறிவு பெறப்படுகிறது. அதாவது, ஐரோப்பிய அறிவு கற்பிக்கப்படுவதாகவும், இந்திய அறிவு, ரிஷிகளாலும், சித்தர்களாலும் உணர்த்தப் படுவதாகவும் உள்ளது.பரப்புகிறார்
தற்போது, அருகருகில் பெற்றோரும் குழந்தைகளும் இருந்தாலும், மொபைல் போன்களால் தனித்தனியாக பிரிந்துஉள்ளனர். ஆனால், மன நலம் பாதித்தவர்களின் குடும்பத்தினர், அவர்களை அருகில் இருந்து பராமரிக்கின்றனர். அதுதான், ஆன்மிகம் சார்ந்த பயிற்சியால் உடலை பராமரிக்கும் பாங்கு. தற்காலத்தில், நம்மை சுற்றியும், நமக்குள்ளேயும் சிறியதும், பெரியதுமாக நிறைய போர்கள் நடக்கின்றன. இதனால், மன அழுத்தம் அதிகமாகிறது. அதற்கு ஒரு தீர்வு தான் யோகா. அதைத்தான், நம் பிரதமர் உலகம் முழுதும் பரப்பி வருகிறார்.யோகாவால், மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தலாம். அதனால், மன நலத்தை காக்கலாம். தற்போது, மாணவ பருவத்திலேயே மன அழுத்தம் ஏற்படுகிறது. அதை போக்கும் வகையிலும், மன அழுத்தத்தை சிறப்பாக கையாளும் வகையிலும், புதிய தேசிய கல்வி கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.
