ராஜிவ் காந்தி பள்ளி நிர்வாகிக்கு முதன்மை சிற்பிகள் விருது
ராஜிவ் காந்தி பள்ளி நிர்வாகிக்கு முதன்மை சிற்பிகள் விருது
UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 09:10 AM
சிதம்பரம்:
காட்டுமன்னார்கோவில் ராஜிவ் காந்தி தேசிய பள்ளி நிர்வாகிக்கு, முதன்மை சிற்பிகள் விருது வழங்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அளவிலான கல்வி கலந்தாய்வு விழா, சென்னையில் நடந்தது. இதில், அரசு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளை தேர்வு செய்து, அதன் தாளாளர் மற்றும் முதல்வர்களுக்கு முதன்மை சிற்பிகள் விருது வழங்கப்பட்டது.அதன்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் காட்டுமன்னார்கோவில் நாட்டார்மங்கலம் ராஜிவ் காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றது. அதையொட்டி பள்ளி நிர்வாகி சுதா மணிரத்தினத்தை பாராட்டி, சட்டசபை தலைவர் அப்பாவு, முதன்மை சிற்பிகள் விருதை வழங்கினார்.
