பல்கலை - தொழில்நுட்ப மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பல்கலை - தொழில்நுட்ப மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 09:11 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
வலுவான தொழிற்கல்வி ஒத்துழைப்பை உருவாக்க, புதுச்சேரி பல்கலைக்கழகம், நடுத்தர சிறு, குறு தொழில்நுட்ப மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கினார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்குச் சான்றிதழ் படிப்புகள், தொழிற்சாலையில் பயிற்சியை சலுகைக் கட்டணத்தில் வழங்குதல், ஆய்வகம், நூலகத்திற்கான முழுமையான அணுகல் ஆகியவை ஒருங்கிணைந்து வழங்கப்பட உள்ளது. நடுத்தர சிறு, குறு, தொழில்நுட்ப மையம் துணைப் பொது மேலாளர் அமித் நைன், மேலாண்மை துறை பேராசிரியர் சாருமதி, தொழில்நுட்ப மைய முதன்மை இயக்குநர் முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
