UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 12:05 PM
செங்கல்பட்டு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் - தாட்கோ - வாயிலாக, டி.சி.எஸ்., அயன் மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு, செவிலியர் பயிற்சி வழங்க உள்ளன.இப்பயிற்சியை பெற, 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில், இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொது மருத்துவம். மருத்துவச்சி, இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த மாணாக்கர்கள் அல்லது கல்லுாரிகளில், இறுதியாண்டு படித்துவரும், 20 வயது முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.இப்பயிற்சி பெற, www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
