UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 10:58 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில் இயல் கலை விழா நைனார்மண்டபம் அன்னை தெரசா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். சரோஜா பாபு முன்னிலை வகித்தார். சபாநாயகர் செல்வம், சம்பத் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இயல் துறையில் சிறப்பான பணி செய்தவர்களுக்கு கலைரத்னா விருது வழங்கப்பட்டது.மாணவர்களின் சொற்பொழிவு, கவிதை முழக்கம் நடந்தது. நிகழ்ச்சியில் சங்க நிறுவனர் தமிழ்வாணன், அன்னை தெரசா மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆனந்தராஜ் ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
