UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 11:01 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ்.எஸ். சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் அம்சங்கள் குறித்த ஆலோசனை கூட்டம், பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் தலைமையில் நேற்று நடந்தது.இதில், திட்டம் குறித்து பள்ளிஆசிரியர்கள் அருள்தாஸ், மாரி, பாண்டியன் விளக்கவுரையாற்றினர். இதில், பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும், பள்ளியின் வளர்ச்சியில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தனர். ஆசிரியர் ஆனந்தகிருஷ்ணன் வரவேற்றார். ஆசிரியர் டில்லிபாபு நன்றி கூறினார்.இதேபோல, சின்ன காஞ்சிபுரம், பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி ஆலோசனை கூட்டத்திற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி தலைமை வகித்தார். இதில், ஓய்வு பெற்ற ஆசிரியைகள், முன்னாள் மாணவியர், அலுவலக ஊழியர்கள் பங்கேற்று, திட்டம் குறித்து ஆலோசித்தனர்.
