UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 11:04 AM
கோவை:
தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனரகம் இணைந்து, மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டியை கோவை அரசு கலை கல்லுாரியில் நடத்தின.கல்லுாரிகள் அளவில், வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர். இதில், பாரதியார், பாரதிதாசன், கவிமணி ஆகியோரின் இலக்கியபங்களிப்பு குறித்த கட்டுரை, ஒரு மணி நேர அவகாசத்திற்குள் எழுத அறிவுறுத்தப்பட்டது. அதன் பின், மாணவர்களின் கையெழுத்து மதிப்பீடு செய்யப்பட்டன.கோவை அரசு கலை கல்லுாரி அரசியல் அறிவியல் துறை மாணவி காவிய பிரியா முதல் இடமும், கொங்குநாடு கலை அறவியல் கல்லுாரி வேதியியல் துறை மாணவர் ஹிர்த்திக் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்களையும், ரொக்க பரிசையும் கல்லுாரி முதல்வர் உலகி வழங்கி பாராட்டினர். அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், தமிழ்த்துறை இணை பேராசிரியர் செல்வசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
