தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/32 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

32 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

32 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை


UPDATED : அக் 12, 2023 12:00 AM

ADDED : அக் 13, 2023 02:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2023 12:00 AM ADDED : அக் 13, 2023 02:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீடு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார்.வட்டார வள மைய மேற்பார்வையாளர் பார்த்திபன் வரவேற்றார். முகாமில் குழந்தைகள் நல மருத்துவர், எலும்பு, மனநலம், காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவர்கள் கொண்ட குழுவினர், மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் முகாமில் கலந்து கொண்ட மாணவர்களை பரிசோதனை மேற்கொண்டனர்.இதில், 32 மாணவர்களுக்கு புதிய தேசிய அடையாள அட்டை, 10 பேருக்கு மறு மதிப்பீட்டு அட்டை உள்ளிட்டவற்றிற்கு ஒப்புதல் அளித்தனர். புதிய தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டைகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் வழங்கினார். முகாமில் மொத்தம், 105 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் துறை, அனைத்து ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us