UPDATED : அக் 13, 2023 12:00 AM
ADDED : அக் 13, 2023 10:23 AM
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், இரண்டு நாள் வேளாண் ஏற்றுமதிக்கான சான்றிதழ்கள் குறித்த பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.இத்துறை சார்பில், ஏற்றுமதி, இறக்குமதி குறித்த ஐந்து நாள் பயிற்சிகள் மட்டும் அளிக்கப்பட்டு வந்தன. முதன்முறையாக, கடந்த அக்., 5ம் தேதி ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன; அதற்கு அதிக வரவேற்பு இருந்தது. அதை தொடர்ந்து, ஏற்றுமதிக்கு தேவையான சான்றிதழ்கள் என்ற பிரிவின் கீழ், இரண்டு நாள் பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில், ஏற்றுமதி துவங்க விரும்புபவர்கள் என்னென்ன சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும்; சான்றிதழ்கள் பெறும் வழிமுறை, கட்டணம் குறித்து பயிற்றுவிக்கப்படும். வரும் 25,26 ஆகிய நாட்கள் இப்பயிற்சிகள் நடக்க உள்ளன. இரண்டு நாள் பயிற்சிக்கு, 3540 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு, 99949 89417 / 9500476626 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
