UPDATED : அக் 13, 2023 12:00 AM
ADDED : அக் 13, 2023 10:43 AM
திட்டக்குடி:
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு 4 மாத சம்பளம் கிடைத்தது.தமிழக அரசின் திட்டங்களின் ஒன்றான இல்லம் தேடிக்கல்வி திட்டம், கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளி மாணவர்களும் கல்வி கற்க கைகொடுத்தது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அளவில் ரூ. 1.80 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.கடந்த ஜூன் மாதம் முதல் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், தன்னார்வலர்கள் அதிருப்தியிலும், சிரமத்திலும் இருந்து வந்தனர். இதுகுறித்து கடந்த அக்., 4ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டி காட்டப்பட்டது.இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தன்னார்வலர்களுக்கு, நான்கு மாத சம்பளம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால், தன்னார்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
