தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நதியை போல் வெற்றியை நோக்கி ஓடுங்கள்

நதியை போல் வெற்றியை நோக்கி ஓடுங்கள்

நதியை போல் வெற்றியை நோக்கி ஓடுங்கள்


UPDATED : அக் 13, 2023 12:00 AM

ADDED : அக் 13, 2023 11:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2023 12:00 AM ADDED : அக் 13, 2023 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
நதியை போல் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லுாரி முன்னாள் முதல்வர் பொன்னம்பலம் நமச்சிவாயம் பேசினார்.திண்டுக்கல் இலக்கிய களம், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் 8வது நாள் புத்தக திருவிழாவில் அவர் பேசியதாவது: 
மாணவர்கள் உழைப்பதாலே அவர்கள் வாழ்வை உயர்த்த முடியும். திட்டமிடல் இருந்தால் தான் நல்ல இடத்திற்கு செல்ல முடியும். எப்பொழுதும் மாணவர்களின் மனதில் விடாமுயற்சி இருக்க வேண்டும். தோல்வி நம்மை பற்றி கொண்டாலும் அதிலிருந்து வெற்றியை நோக்கி செல்ல வேண்டும். புத்தகங்கள் வாசிப்பதை அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் அதிக விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். மனிதர்கள் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், என்றார்.மகரிஷி வித்யா மந்திர் பள்ளி தாளாளர் நளினி தலைமை வகித்தார். முதல்வர் சினேக லதா ஒருங்கிணைத்தார். ஆசிரியர் சரஸ்வதி வரவேற்றார். திவ்யா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us