மாணவர்களுக்கும் ஊக்க தொகை: பிரசாரத்தில் பிரியங்கா சலுகை மழை
மாணவர்களுக்கும் ஊக்க தொகை: பிரசாரத்தில் பிரியங்கா சலுகை மழை
UPDATED : அக் 13, 2023 12:00 AM
ADDED : அக் 13, 2023 11:10 PM
மண்டலா:
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும்; அத்துடன், மாதந்தோறும் ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என பிரச்சார கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா அறிவித்தார்.நவ., 17ல் தேர்தல்
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு நவ., 17ல் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக மண்டலாவில் நேற்று நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில், அதன் பொதுச் செயலர் பிரியங்கா பேசியதாவது:
தேர்தலில் காங்கிரஸ் வென்றால் சமையல் காஸ் சிலிண்டர், 500 ரூபாய்க்கு வழங்கப்படும். மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகையாக, 1,500 ரூபாய் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும், 100 யூனிட் இலவச மின்சாரமும், 200 யூனிட் வரை, 50 சதவீத சலுகை விலையிலும் வழங்கப்படும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் கடன் தள்ளுபடி அளிக்கப்படும்.கடந்த, 18 ஆண்டுகளாக இங்கு பா.ஜ., ஆட்சியில் இருந்துள்ளது. இந்த 225 மாதங்களில், 250 ஊழல்களை செய்துள்ளனர். மக்களுக்கு எந்த திட்டத்தையும் பா.ஜ., அரசு செயல்படுத்தவில்லை. இந்த மாநிலத்தில் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும்.மாதந்தோறும்
மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்கப்படும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 500 ரூபாய், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு, 1,000 ரூபாய், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 1,500 ரூபாய் மாதந்தோறும் ஊக்கத தொகையாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
