பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி
பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி
UPDATED : அக் 13, 2023 12:00 AM
ADDED : அக் 13, 2023 11:16 PM
திண்டுக்கல்:
திண்டுக்கல் அட்சுதா பப்ளிக் பள்ளியிலிருந்து பிரதமரின் பரிக்சா பே சர்ச்சா 2023 நிகழ்ச்சியில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் உலகின் மிகப் பெரிய தேர்வு திருவிழாவான தேர்வும் தெளிவும் - பரீட்சையை பற்றி விவாதிப்போம் நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் திண்டுக்கல் அட்சுதா பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார்.அந்த கடிதத்தில் உங்களைப் போன்ற இளம் குடிமக்களின் எண்ணங்களைத் தெரிந்துகொள்வதும் புரிந்துகொள்வதும் எப்போதும் ஊக்கமளிக்கிறது. இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆற்றல், தன்னம்பிக்கை, திறன்களைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த பெருமிதம் ஏற்படுகிறது.தேசத்தின் எதிர்பார்ப்புகள், கனவுகள் அவற்றின் இளையசக்தியுடன் வலுவாக பிணைக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், புதிய கண்டுபிடிப்புகள், விளையாட்டு, ஸ்டார்ட்அப்கள் என எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் அவர்களுக்கு வசதிகளுக்கும், வளங்களுக்கும் பஞ்சமில்லை. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கான அமிர்த காலம் ஆகும்.புகழ்பெற்ற, வளர்ந்த, அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான உறுதியுடன் முன்னேற வேண்டிய நேரம் இது. வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களின் எதிர்காலத்திற்கு வாழ்த்துகிறேன், என தெரிவித்துள்ளார்.
