தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓயாமல் ஒலித்த குண்டு சத்தம்: சென்னை திரும்பிய மாணவர்கள் பேட்டி

ஓயாமல் ஒலித்த குண்டு சத்தம்: சென்னை திரும்பிய மாணவர்கள் பேட்டி

ஓயாமல் ஒலித்த குண்டு சத்தம்: சென்னை திரும்பிய மாணவர்கள் பேட்டி


UPDATED : அக் 14, 2023 12:00 AM

ADDED : அக் 14, 2023 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2023 12:00 AM ADDED : அக் 14, 2023 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓயாமல் குண்டு சத்தம் கேட்டுக்கொண்டிருத்ததால் கடந்த ஒரு வாரமாக அச்சத்தில் இருந்தோம், என இஸ்ரேலிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் கூறினர்.மணிகண்டன், நன்னிலம், திருவாரூர்:
நான் உயர் கல்வி ஆராய்ச்சிகாக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இஸ்ரேல் சென்றேன். அங்கு போர் துவங்கிய ஒரு வாரம், மிகுந்த அச்சம் பீதியில் இருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடம் அருகே குண்டு வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தது. ராக்கெட் குண்டுகளை கீழே வராமல், தடுத்து அழிப்பர். அந்த சத்தம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டு இருந்ததால், நாங்கள் ஒரு வாரமாக நிம்மதியாக இருக்கவில்லை.மத்திய அரசு மற்றும் தமிழக அரசு, இந்திய துாதரகம் வாயிலாக உரிய நடவடிக்கை எடுத்து, எங்களை மீட்டனர். அவர்கள், தொடர்ந்து எங்களை கண்காணித்து, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தி வந்தனர். அவர்களின் மீட்பு பணி மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் தற்போது பத்திரமாக, சொந்த ஊர் திரும்பி இருக்கிறோம்.எனக்கு மூன்று ஆண்டுகள் விசா இருக்கிறது. போர் ஓய்ந்ததும் மீண்டும் இஸ்ரேல் சென்று, என் ஆராய்ச்சி படிப்பை தொடர்வேன்.கோகுல் மணவாளன், தேனி:
கடந்த ஒரு வாரமாக தீவிரவாதிகள் தாக்குதலால், நாங்கள் தங்கி இருந்த பகுதி பாதிக்கப்பட்டது. தற்போது தீவிரவாதிகள், எங்களை பத்து கிலோ மீட்டர் துாரத்தில் நெருங்கி விட்டனர் என்ற தகவல் வந்ததால், நாங்கள் தற்போது இந்தியாவுக்கு வந்து விட்டோம்.போர் துவங்கியதுமே, இந்திய துாதரகம், எங்களை தொடர்பு கொள்ள துவங்கி விட்டது. அதோடு, தமிழக அரசிடமிருந்தும் எங்களைத் தொடர்பு கொண்டனர். எங்களை மிகுந்த பாதுகாப்புடன், முதல் விமானத்திலேயே அழைத்து வந்தது, மகிழ்ச்சியாக இருக்கிறது.போர் நடந்த போது, இங்கு தகவல் தொடர்பு சரியாக கிடைக்காததால், குடும்பத்தினருடன் பேச முடியவில்லை. இனிமேலும் குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்த வேண்டாம் என்பதால் தான், உடனடியாக புறப்பட்டு வந்து விட்டோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us