UPDATED : அக் 14, 2023 12:00 AM
ADDED : அக் 14, 2023 05:31 PM
திண்டுக்கல்:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி செய்தி குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு,தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கல்வித் தகுதியினைப் பதிவிட்டு ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு பெறலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயது, இதர வகுப்பினர் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000. தமிழகத்திலேயே கல்வி முடித்தவர்களாகவும், வேறு எந்தப் பணியிலும் ஈடுபடாதவர்களாகவும் இருக்க வேண்டும்.அரசு மற்றும் பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும் பெற்றிருக்கக்கூடாது. பள்ளி, கல்லூரியில் சென்று படிப்பவராக இருக்கக்கூடாது. தகுதி உள்ளோர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் https://tnvelaivaaippu.gov.in, www.tnvelaivaaippu.gov.in ல் பதிவிறக்கம் செய்து நவ. 30 குள் வழங்க வேண்டும்.
