தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரு அரசு பணிகளுக்கு நாளை எழுத்து தேர்வு

இரு அரசு பணிகளுக்கு நாளை எழுத்து தேர்வு

இரு அரசு பணிகளுக்கு நாளை எழுத்து தேர்வு


UPDATED : அக் 15, 2023 12:00 AM

ADDED : அக் 15, 2023 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2023 12:00 AM ADDED : அக் 15, 2023 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
அறுவை சிகிச்சை கூட உதவியாளர் மற்றும் போலீஸ் துறையில் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை 15ம் தேதி நடக்கின்றது.இதுகுறித்து நிர்வாக சீர்திருத்த துறை விடுத்துள்ள செய்திகுறிப்பு:
சுகதார மற்றும் குடும்ப நலத் துறையில் அறுவை சிகிச்சை கூட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை 15ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி நடக்கின்றது. அன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, போலீஸ் துறையில் ஓட்டுநர் நிலை-3 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது.இவ்விரு தேர்வுகளும் புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் நடக்கின்றது. இதில், அறுவை சிகிச்சை கூட உதவியளர் பணியிடத்திற்கு 485 பேரும், போலீஸ் ஓட்டுநர் பணிக்கு 73 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வர்கள், ஹால்டிக்கெட்டில், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையெழுத்திட்டு எடுத்து வர வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும். தாமதமாக வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us