தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் குழந்தை நல அலுவலர் ஆய்வு

மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் குழந்தை நல அலுவலர் ஆய்வு

மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் குழந்தை நல அலுவலர் ஆய்வு


UPDATED : அக் 15, 2023 12:00 AM

ADDED : அக் 15, 2023 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2023 12:00 AM ADDED : அக் 15, 2023 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலுார்:
வடலுார் ஆபத்தாரணபுரத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில், குழந்தைகள் நல அலுவலர் அரவிந்த் தலைமையில் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர்.வடலுார், ஆபத்தாரணபுரத்தில் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி அறக்கட்டளை உதவியில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 25 மன வளர்ச்சி குன்றிய மாணவ, மாணவியர் தங்கி உள்ளனர். அதில் ஒரு சிறுவனுக்கு உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதே போல் மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.இதனைதொடர்ந்து, கடலுார் மாவட்ட குழந்தைகள் மனநல அலுவலர் அரவிந்த் தலைமையில், வடலுார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கனிமொழி, பாலாஜி ஆகியோர் கொண்ட குழுவினர் பள்ளிக்கு வந்து அங்கு தங்கி உள்ள அனைத்து மாணவ, மாணவிகளையும் பரிசோதனை செய்தனர். இதில் ஒரு சிறுவனைத் தவிர வேறு யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது தெரிய வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us