பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் வேலைவாய்ப்பு பயிற்சி
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் வேலைவாய்ப்பு பயிற்சி
UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 15, 2023 10:15 AM
புதுச்சேரி:
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் புதுச்சேரி அரசு மற்றும் ஸ்கில்ஸ்-டி.ஏ.,நிறுவனம் சார்பில் பி.காம்., பி.சி.எஸ்., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு பயிலும் மாணவிகளுக்கு சான்றளிக்கப்பட்ட நிதி மோசடி புலனாய்வாளர், சைபர் பாதுகாப்பு என்ற தலைப்பில் வேலைவாய்ப்பு பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வுகளில் ஸ்கில்ஸ் -டி.ஏ.,நிறுவன அதிகாரிகள் பிரகாஷ் சந்திரா ஜோசுவா, மணிவண்ணன் ஆகியோர் வேலைவாய்ப்பு திறனுக்கான பயிற்சி அளித்தனர்.மாணவிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இளங்கலை துறைத் தலைவர்கள் சிவக்குமார், சோமசுந்தரம், ரங்கசாமி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு அதிகாரி சாய்பிரியா செய்திருந்தார்.
