UPDATED : அக் 14, 2023 12:00 AM
ADDED : அக் 14, 2023 05:35 PM
மதுரை:
தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் இணைந்து வழங்கும் அ னா... ஆவன்னா... அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் அக்.,24 காலை 9:00 முதல் 11:30 மணி வரை நடக்கிறது. கல்விக்கடவுள் சரஸ்வதியை வழிபடும் நாளான அக்.,24 விஜயதசமி அன்று, குழந்தைகளுக்கு கல்வி மற்றும் கலைகள் கற்பிப்பதற்கான துவக்கநாள். விஜயதசமி திருநாள் வித்யாரம்பத்துக்கு உகந்தநாள்.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சியில் உங்கள் வீட்டு தளிர்களின் பிஞ்சுவிரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்க வேண்டுமா... இரண்டரை முதல் மூன்றரை வயது குழந்தைகளை நிகழ்ச்சிக்கு அழைத்து வரலாம்.உங்கள் மழலையர் கல்விக் கோயிலுக்குள் முதல் அடியை எடுத்து வைக்க தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் ஏற்பாடுகளை செய்துள்ளன. பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தினமலர் நாளிதழ் இலவசமாக வழங்குகிறது.இந்நிகழ்ச்சியை ஆனந்தா அண்ட் ஆனந்தா, ஸ்ரீ நர்ஸிங் ஸ்வீட்ஸ் லிட்., அருணாச்சலா அரிசி கடை அண்ட் ஓட்டல் இணைந்து வழங்குகின்றன. பவர்டு பை அம்மன் உயர்தர சைவ உணவகம்.குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, அலைபேசி எண் குறித்த விவரங்களை 81909 09409ல் காலை 10:00 முதல் மாலை 6:00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். அனுமதி இலவசம்.
