UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 15, 2023 10:33 AM
மைசூரு:
மைசூரு தசராவை முன்னிட்டு, பத்து நாட்களும், கலைநிகழ்ச்சிகள், இளைஞர் தசரா உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.நேற்று மாலை 5:00 மணிக்கு, பழைய கலெக்டர் அலுவலக கட்டடம் பின்பக்கம் உள்ள, ஓவல் கிரவுண்ட் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி துவங்கியது. கன்னடம் மற்றும் கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி துவக்கிவைத்தார். 24ம் தேதி வரை நடக்கிறது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எழுத்தாளர்கள், புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர். நாட்டுப்புற பாடல் பாடுவது, நடன போட்டி, பாட்டு கச்சேரியும் நடக்கிறது. வரும் 17, 18ம் தேதிகளில் ஜெகன்மோகன் அரண்மனையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், சிறுவர் தசரா நடக்கிறது.கோலம் போடும் போட்டி; ஓவியப் போட்டி உட்பட பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் மது பங்காரப்பா துவக்கிவைத்தார்.
