UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 15, 2023 06:17 PM
அ நிறம் | அளவு
தேனி:
தேனி மருத்துவக்கல்லுாரியின் புதிய முதல்வராக டாக்டர் எஸ். பாலசங்கர் நேற்று பொறுப்பேற்றார்.தேனி மருத்துவக்கல்லுாரி முன்னாள் முதல்வர் மீனாட்சி சுந்தரம், லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின் பொறுப்பு முதல்வராக டாக்டர் திருநாவுக்கரசு பொறுப்பேற்றார். தற்போது தேனி மருத்துவக்கல்லுாரி முதல்வராக மதுரை மருத்துவக்கல்லுாரி இயக்குனரும், குழந்தைகள் நலத்துறை தலைவருமான டாக்டர் எஸ். பாலசங்கர் நியமிக்கப்பட்டார். நேற்று முதல்வராக டாக்டர் பாலசங்கர் பொறுப்பேற்றார். இவர் மதுரை மருத்துவக்கல்லுாரி இயக்குனராகவும், குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவராக பணிபுரிந்தார். தற்போது தேனி மருத்துவக்கல்லுாரி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
