UPDATED : அக் 16, 2023 12:00 AM
ADDED : அக் 16, 2023 09:41 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்:
உலக பார்வை தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராஜபாளையத்தில் 10 வயது மாணவி இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக கண்களை இமைக்காமல் உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.ராஜபாளையம் தனியார் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி அனிஷ்கா. உலக சாதனை புரிய வேண்டும் என யோகா பயிற்சியாளர் அய்யப்பனிடம் கண்களை இமைக்காமல் இருந்து பயிற்சி பெற்று வந்தார்.கண் தானம், பார்வை இழப்பை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இரண்டு மணி நேரம் அனிஷ்கா இமைக்காமல் செய்த சாதனை, ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு வீடியோ மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சாதனைக்கான சான்றிதழ், பதக்கம் ஆய்விற்கு பின் அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
