UPDATED : அக் 16, 2023 12:00 AM
ADDED : அக் 16, 2023 09:49 AM
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், ஓவியர்.இவர், நீர் வண்ணம் உள்ளிட்ட பல வித ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார்.மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவியருக்கு ஓவியப்பயிற்சி அளித்து வருகிறார். இவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உருவத்தை, எழுத்து ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி பெயரை ஆங்கில எழுத்துக்களில், முழு உருவ ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இது காண்போரை, வியக்கவைக்கும் விதமாக உள்ளது.இதுகுறித்து, அய்யன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஓவியர் பா.சங்கர் கூறியதாவது:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உருவத்தில், அவரின் பெயரை எழுத்து ஓவியமாக வரைந்து உள்ளோம். இதில், வண்ண நிற பென்சிலை உபயோகப்படுத்தி உள்ளேன். இறுதி வடிவத்தை கொடுத்துள்ளேன். அற்புதமாக வந்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
