UPDATED : அக் 17, 2023 12:00 AM
ADDED : அக் 17, 2023 10:02 AM
பல்லடம்:
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மற்றும் பல்லடம் வட்டார வள மையத்தின் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மேற்கு பல்லடம் அரசு துவக்கப் பள்ளியில் நடந்தது.நகராட்சி தலைவர் கவிதாமணி, துவக்கி வைத்தார். மாவட்ட திட்ட அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம், வட்டார கல்வி அலுவலர் ராமச்சந்திரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அங்கையற்கண்ணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் வசந்த ராமகுமார், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.முன்னதாக, கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு, கால் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் தொடர்பாகவும், பரிசோதனைகள், சிகிச்சைகள் வழங்கப்பட்டன. முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராமசாமி தலைமையிலான மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சைகளை வழங்கினர்.நுாற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் முதியவர்களும் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.
