குழந்தைகள் உரிமை அறிய பி.எட்.,படிப்பில் புதிய பாடம் அறிமுகம்!
குழந்தைகள் உரிமை அறிய பி.எட்.,படிப்பில் புதிய பாடம் அறிமுகம்!
UPDATED : அக் 17, 2023 12:00 AM
ADDED : அக் 17, 2023 10:05 AM
கோவை:
பி.எட்., மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்தில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் புதிய பாடம் (முக்கிய தேர்வுத்தாள்) நடப்பாண்டு முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், கல்வியியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில் பி.எட்., படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்தில், அண்டஸ்டேண்டிங் டிசிபிலின்ஸ் அண்டு சப்ஜெக்ட் என்ற முக்கிய தாளுக்கு பதிலாக, சைல்டு் ரைட்ஸ் அண்டு புரடக்சன் என்ற தாள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பள்ளி ஆசிரியர்களாக களம் இறங்கவுள்ள , பி.எட்., மாணவர்களுக்கு இதுகுறித்த ஆழமான புரிதல் இருக்க வேண்டும் என, இத்தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இதில், குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு ரீதியான சட்டங்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, மாணவர்களிடையே போதை பயன்பாடு , குழந்தை வன்முறை சார்ந்த சட்டங்கள் மற்றும் விளைவுகள், குழந்தைகளிடையே தற்கொலை எண்ணங்கள், கட்டாய கல்வி உரிமைச்சட்டம், குழந்தை திருமண சட்டம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள், ஐந்து பிரிவுகளின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.பள்ளிகளில் ஏற்படும் பாலியல் ரீதியான சிக்கல்களுக்கு தீர்வு காணவும், ஆரம்பம் முதல் குழந்தைகளுக்குபாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் வாயிலாக ஏற்படுத்தவும், இத்தாள் பி.எட்., மாணவர்களுக்கு, கற்பிக்கப்பட வேண்டியது அவசியம்.இதற்கு, கல்வித்துறை வட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து, பல்கலை தரப்பில் இருந்து கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக, பி.எட்., கல்லுாரி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
