தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/லட்சிய ஆசிரியர்களுக்கு தினமலர் விருது!

லட்சிய ஆசிரியர்களுக்கு தினமலர் விருது!

லட்சிய ஆசிரியர்களுக்கு தினமலர் விருது!


UPDATED : அக் 17, 2023 12:00 AM

ADDED : அக் 17, 2023 02:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2023 12:00 AM ADDED : அக் 17, 2023 02:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
நல்ல பண்புகளை கொண்ட, தலைசிறந்த மாணவர்களை உருவாக்கும் லட்சிய ஆசிரியர்களுக்கு விருது வழங்குவதில் பெருமிதம் கொள்வதாக, லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழாவில், எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேசினார்.தினமலர் சார்பில், லட்சிய ஆசிரியர் - 2023 விருது வழங்கும் விழா நேற்று, தினமலர் அலுவலக லோட்டஸ் ஹாலில் நடந்தது. தினமலர் கோவை பதிப்பு செய்தி ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 10 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.விருது வழங்கிய பின், எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேசியதாவது:
தினமலர் நாளிதழ் சார்பில், கற்பித்தல் பணிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை, தேர்வு செய்து, ஆண்டுதோறும் விருது வழங்குவது மகத்தான செயல். நானும் ஆசிரியராக சில காலம் பணியாற்றியிருக்கிறேன். அந்தவகையில், லட்சிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் வாய்ப்பை, என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன்.ஆசிரியர்கள் ஒழுக்கம், கீழ்படிதல், நல்ல பண்புகளை கொண்ட தலைசிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும். அந்த வகையில், கற்பித்தல் பணிகளில் மட்டுமே முழுகவனம் செலுத்தியதால் தான், தினமலர் நாளிதழ், லட்சிய ஆசிரியர் விருது வழங்கி பாராட்டியுள்ளது. இவ்விருது பெற்ற பிறகு, கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.விருது பெற்ற ஆசிரியர்கள்
* பிரியதர்ஷினி, தலைமை ஆசிரியை, சாந்தி நிகேதன் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி, கே.கே.எஸ்.நகர், குள்ளம்பாளையம், திருப்பூர்.* வடிவேலன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அவிநாசி.* மாரிமுத்து, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அன்னுார்.* ராதா, இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டிபிரிவு, பெரியநாயக்கன்பாளையம்.* கவிதா, உடற்கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி.* மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அறிவியல் பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, சோழமாதேவி, உடுமலை.* கணேசன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொப்பம்பட்டி, பொள்ளாச்சி.* வசந்தகுமார், கணித ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உருளிக்கல் மேல்பிரிவு, வால்பாறை.* மாசிலாமணி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அண்ணாநகர், சேத்துமடை, பொள்ளாச்சி.* கீதாராணி, பட்டதாரி ஆசிரியை, ஸ்ரீ ராமகிருஷ்ணமிஷன் வித்யாலயா, பெரியநாயக்கன்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us