தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்; 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்; 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்; 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


UPDATED : அக் 17, 2023 12:00 AM

ADDED : அக் 17, 2023 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2023 12:00 AM ADDED : அக் 17, 2023 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசுவதாக கூறி அக்.,13ல் போராட்டம் நடந்தது.இதையடுத்து பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம், மாணவர்களை போராட துாண்டியதாக ஆசிரியர்கள் செல்வகுமார், வெற்றிவேல் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை 350 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். 27 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவ, மாணவிகளிடம் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்வதாக புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனை கண்டித்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து அக்., 13ல் மறியலில் ஈடுபட்டனர். சி.இ.ஓ., இந்திராணி, இடைநிலைகல்வி டி.இ.ஓ., வசந்தா ஆகியோர் மாணவர்கள், பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.பள்ளியில் ஆசிரியர்களுக்குள் நிலவும் கோஷ்டி பூசலால் சில ஆசிரியர்கள் மாணவர்களை போராட துண்டவதாக புகார்கள் வெளியாகின. பிரச்னைக்குரிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர்களை பள்ளி அனுப்ப மாட்டோம் என பெற்றோர் கூறினர்.புகார்களை சி.இ.ஓ., தனித்தனியாக வாங்கினார். துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறி சென்றார். இதனை தொடர்ந்து இரு நாட்களாக கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.இதையடுத்து ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருள் பிரகாசம், வணிகவியல் ஆசிரியர் செல்வக்குமார், தாவரவியல் ஆசிரியர் வெற்றிவேல் ஆகியோரை சி.இ.ஓ., சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us