புதுச்சேரியில் 24ம் தேதி அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி
புதுச்சேரியில் 24ம் தேதி அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி
UPDATED : அக் 18, 2023 12:00 AM
ADDED : அக் 18, 2023 07:54 PM
புதுச்சேரி:
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து நடத்தும், அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி புதுச்சேரியில் வரும் 24ம் தேதி நடக்கிறது.தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் புதுச்சேரி விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து நடத்தும் அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சரஸ்வதி ஹாலில் நடக்கிறது.விஜயதசமி (24ம் தேதி) அன்று காலை 7.00 மணி முதல் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், இரண்டரை மற்றும் மூன்றரை வயதுள்ள மழலைகளின் கைவிரல் பிடித்து, பிரபல கல்வியாளர்கள், மருத்துவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபலங்கள் அ -ஆ எழுதி பழக்க உள்ளனர்.நிகழ்ச்சியில், முன் பதிவு செய்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும். பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஸ்கூல் கிட் பரிசாக வழங்கப்படும். விவேகானந்தா கல்விக் குழுமத் தலைவர் செல்வகணபதி எம்.பி., புதுச்சேரி கலெக்டர் வல்லவன், சீனியர் எஸ்.பி, நாரா சைதன்யா, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன், ஆடிட்டர் செல்வராஜ், புதுச்சேரி சுகாதார துறை முன்னாள் இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தி, &'அகரம்&' கற்பிக்க உள்ளனர்.குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் நாள், அவர்களின் வாழ்நாளில் மிக முக்கிய நாள். அவர்களது ஆரம்ப நிலை கல்வியறிவு தான் அவர்களது அறிவாற்றலுக்கும், நற்பண்புகளுக்கும் வாழ்நாள் முழுதும் துணை நிற்கும்.விஜயதசமி திருநாள், கல்வியை கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். இந்நாளில் உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்க கல்வியாளர்கள், உயர் அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான முன்பதிவுக்கு, இன்று 18 மற்றும் நாளை 19ம் தேதி காலை 7:00 மணி முதல் காலை 10:00 மணி வரை, 95973 26264, 78714 79674 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. கல்விக் கோவிலுக்கு அடியெடுத்து வைக்க, உங்க செல்ல குட்டீஸ்களை காலை 7:00 மணிக்குள் அழைத்து வாருங்கள்.
