UPDATED : அக் 19, 2023 12:00 AM
ADDED : அக் 19, 2023 10:16 AM
காஞ்சிபுரம்:
இந்திய அரசு, ஜவுளி அமைச்சகம் கைத்தறி அபிவிருத்தி ஆணையர் அலுவலகம், காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் சார்பில், காதி மஹோத்ஸவ் என்ற பெயரில் மாவட்ட கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா, காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள வீராசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., எழிலரசன் கண்காட்சியை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வரும் 22ம் தேதி வரை, காலை 10:00 முதல், இரவு 9:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில், காஞ்சிபுரம் பட்டுசேலையை நெசவாளர்கள் நெசவு செய்யும் வகையில், கைத்தறி நெசவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், காஞ்சிபுரம், ஆரணி, பரமக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தயாரிக்கப்பட்ட கைத்தறி சேலைகள் கதர் வாரியத்தின் வாயிலாக தயாரிக்கப்படும் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. விழாவில், நெசவாளர் சேவை மையத்தின் மண்டல உதவி இயக்குனர் சசிகலா, கைத்தறி மற்றும் துணி நுால் துறை, தேசிய கைத்தறி வளர்ச்சி கழக அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
