அழகப்பா பல்கலை துணைவேந்தருக்கு அறிவியல் விஞ்ஞானி விருது
அழகப்பா பல்கலை துணைவேந்தருக்கு அறிவியல் விஞ்ஞானி விருது
UPDATED : அக் 19, 2023 12:00 AM
ADDED : அக் 19, 2023 05:01 PM
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் கே.ரவி, தமிழ்நாடு அறிவியல் விஞ்ஞானி விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.தமிழக அரசு சார்பில், அறிவியல் விஞ்ஞானி விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டன. இதில், 2021ம் ஆண்டிற்கான இயற்பியல் ஆராய்ச்சி விருதுக்கு ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இயற்பியல் ஆய்வு கட்டுரையில், காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் கே.ரவி, இயற்பியலில் பொருள் அறிவியல் (மெட்டீரியல் சயின்ஸ்) சார்ந்த ஆய்வு கட்டுரையை தாக்கல் செய்தார். இயற்பியல் மட்டுமின்றி உடல் அறிவியல் (பிசிக்கல் சயின்ஸ்) உட்பட ஏராளமான தலைப்புகளில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கட்டுரை சமர்பித்தனர். இதில், இயற்பியல் பிரிவு சார்பில் சிறந்த கட்டுரைக்கென தேர்வு செய்து, தமிழ்நாடு அறிவியல் விஞ்ஞானி விருது, துணைவேந்தர் கே.ரவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து துணைவேந்தர் கே.ரவி கூறியதாவது:
எனது ஆராய்ச்சி கட்டுரை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும். இதன் மூலம் காப்புரிமை கிடைக்கும். எனது ஆராய்ச்சி கட்டுரையை மேற்கோள்காட்டப்படும். இந்த விருதை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக சென்று பெறுவோம். ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு, கேடயம், சான்று வழங்கப்படும், என்றார்.
