தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சியில் அறிவியல் கண்காட்சி

மாநகராட்சியில் அறிவியல் கண்காட்சி

மாநகராட்சியில் அறிவியல் கண்காட்சி


UPDATED : அக் 20, 2023 12:00 AM

ADDED : அக் 20, 2023 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2023 12:00 AM ADDED : அக் 20, 2023 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே, அறிவியல் மற்றும் அண்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சந்திரயான் மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியை, மேயர் பிரியா துவக்கி வைத்தார்.அறிவியலாளர்களின் சாதனைகள், விண்வெளி சார்ந்த விளக்கங்களை எடுத்துரைக்கும் வகையில், விடுமுறை நாட்கள் உட்பட நவ., 14ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.தினமும் காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இதில், வானவியல் குறித்து காலை நான்கு நிகழ்வாகவும், மாலை நான்கு நிகழ்வாகவும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வான்நோக்கி வாயிலாக வான் செயல்களை பார்வையிடுவதுடன், அதுகுறித்த விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.நிகழ்வில், துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us