தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு பெட்டகம்

பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு பெட்டகம்

பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு பெட்டகம்


UPDATED : அக் 20, 2023 12:00 AM

ADDED : அக் 20, 2023 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2023 12:00 AM ADDED : அக் 20, 2023 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்:
கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.அரசின் சித்த மருத்துவத் துறை சார்பில் நல்வாழ்வு திட்டத்தின் மூலம் நிகழ்ச்சி நடந்தது. பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகம் ஊராட்சித் தலைவர் மொக்கப்பன் தலைமையில் வழங்கப்பட்டது. சித்தா டாக்டர் சிராஜுதீன் கூறும் போது, பெட்டகத்தில் உள்ள நெல்லிக்காய் லேகியத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால் மழைக்காலங்களில் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் வராமல் தடுக்கும்.உரை மாத்திரையில் அதிமதுரம், சாதிக்காய், சுக்கு, தாளிசம் போன்ற 10 மூலிகைகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு அளிக்கும், என்றார். கிராம சுகாதார செவிலியர் கமலவள்ளி, பள்ளி தலைமை ஆசிரியை ரெஜினாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us