கட்டுமானப்பணிகள் முடக்கம்: பள்ளி வாடகை கட்டடத்தில் செயல்படும் அவலம்
கட்டுமானப்பணிகள் முடக்கம்: பள்ளி வாடகை கட்டடத்தில் செயல்படும் அவலம்
UPDATED : அக் 20, 2023 12:00 AM
ADDED : அக் 20, 2023 11:12 AM
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் வடக்குத் தெருவில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டுமான பணிகள் முடங்கியுள்ளதால் இரு ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.உத்தமபாளையம் வடக்குத்தெரு, அங்காளம்மன் கோயில் வீதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் இப்பகுதி குழந்தைகள் படித்து வருகின்றனர். கட்டடம் சேதமடைந்ததால் 2 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து விட்டு கட்ட அனுமதி வழங்கப்பட்டது.கட்டட பணிகள் முடியும் வரை தற்காலிகமாக 2 கி.மீ. தொலைவில் உ-. புதூர் பகுதியில் வாடகை கட்டடத்தில் செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கட்டட பணிகள் 2 ஆண்டுகளாக நடந்தும் முடிவிற்கு வரவில்லை. தற்போது சில மாதங்களாக பணிகள் நிறுத்தி உள்ளனர்.கட்டட பணிகள் முடிவடையாமல் இருப்பதால், குழந்தைகள் 2 கி.மீ. துாரமுள்ள வாடகை கட்டடத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. நீண்டதுாரம் நடந்து செல்ல வேண்டியதால் - பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தி விட்டனர். கட்டடம் கட்டுமான பணிகளை கவனிக்க வேண்டிய ஒன்றிய பி.டி.ஓ. கண்டுகொள்ளாமல் உள்ளார்.இதனால் புதிய பள்ளி கட்டட கட்டுமான பணிகள் பாதியில் நின்றுள்ளது. ஒருபுறம் வாடகையாக அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. மாவட்ட திட்ட அதிகாரி இக் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்து பணி நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
