தமிழ் புறக்கணிப்பை கைவிட வேண்டும் சிந்தனையாளர் பேரவை கோரிக்கை
தமிழ் புறக்கணிப்பை கைவிட வேண்டும் சிந்தனையாளர் பேரவை கோரிக்கை
UPDATED : அக் 20, 2023 12:00 AM
ADDED : அக் 20, 2023 11:14 AM
புதுச்சேரி:
பாரதிதாசன் கல்லுாரியில் தமிழ் மொழிப்பாடம் குறைக்கப்படுவதை கைவிட வேண்டும் என புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை கோரியுள்ளது.பேரவை தலைவர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்த்துறை அல்லாத பிற துறைகளில் தமிழ் மொழிப்பாட வேளைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தமிழ் மொழியை அதன் இலக்கியம் இலக்கணம் கற்பதற்கு வழி இல்லாமல் செய்யப்பட்டுள்ளதை சிந்தனையாளர் பேரவை கண்டிக்கிறது.இதனால் தமிழ் துறை இல்லாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது. பாரதிதாசன் கல்லுாரியில் தமிழ் புறக்கணிப்பை கைவிட வேண்டும். கவர்னர், முதல்வர் தலையிட்டு தமிழ் மொழிக்கு பாதுகாப்பு தர வேண்டும்.இக்கல்லுாரியில் ரூ. 1 கோடியில் ஆய்வு இருக்கை அமைத்து தமிழ் மொழி குறிதது் ஆய்வுகள் மேற்கொள்ள ஆணையிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
